வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணையதளம் மூலம் இணைக்கலாம்


வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணையதளம் மூலம் இணைக்கலாம்
x

இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி

ஆதார் எண் இணைப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு படி கடந்த 1-ந் தேதி முதல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. வாக்காளர்கள் தங்களின் ஆதார் எண்ணை www.nvsp.in மற்றும் www.voterportal.eci.gov.in என்ற இணைய தளங்களின் மூலம் வாக்காளர் பட்டியலில் இணைத்து கொள்ளலாம்.

மேலும் Voters Helpline App என்ற செல்போன் செயலி மூலமோ அல்லது தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட படிவம் 6பி-ஐ பூர்த்தி செய்து தங்களின் வாக்குச்சாவடிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ வழங்கி இணைக்கலாம்.

ஆன்லைன் சான்றிதழ்

சுதந்திர தினத்தையொட்டி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு மாவட்டத்திலும் இணையதளம் மூலமோ அல்லது செல்போன் செயலி மூலமோ வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைப்பவர்களுக்கு ஆன்லைன் சான்றிதழ் வழங்க உள்ளது. இந்த சான்றிதழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலில் பதிவு செய்யும் ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கப்படும். எனவே அனைத்து வாக்காளர்களும் உடனடியாக தங்களின் ஆதார் எண்ணை இணையதளங்கள், செல்போன் செயலி மூலம் இணைத்து தேர்தல் ஆணையத்தின் ஆன்லைன் சான்றிதழை பெறலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story