நீர்ப்பாசன சங்கங்களின் தலைவருக்கான தேர்தல்; அடுத்த மாதம் நடத்த முடிவு


நீர்ப்பாசன சங்கங்களின் தலைவருக்கான தேர்தல்; அடுத்த மாதம் நடத்த முடிவு
x

நீர்ப்பாசன சங்கங்களின் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 452 நீரினைப் பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான முதல் கட்ட தேர்தல் 2009-ம் ஆண்டு நடைபெற்றது. அதன் பணிக்காலம் கடந்த 2014-ம் ஆண்டு முடிவுற்றது. முடிவுற்ற மேற்படி 452 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் நடத்துவது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 4 உபவடிநில பகுதிகளுக்கான முறையே தெற்கு வெள்ளாறு உபவடி நிலம் -195, பாம்பாறு-143, அக்னியாறு-73 மற்றும் அம்புலியாறு-41 என மொத்தம் 452 நீர்பாசன சங்கங்களுக்கான தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) முதல் வாரத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டது. மேலும் 11 வட்ட அலுவலகத்திற்குட்பட்ட 371 கிராம பஞ்சாயத்துக்களில் 371 நீர்ப்பாசன சங்க தலைவர் மற்றும் 2074 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு விரைவில் தேர்தல் நடத்த நீர்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, புதுக்கோட்டை ஆர்.டி.ஓ. முருகேசன், நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் கனிமொழி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story