கல்வி சங்கல்ப பூஜை
கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை தெற்கு 4-ம் வீதி மார்கெட்டில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கல்வி வழிபாடு, லெட்சுமி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை நடைபெற்றது. இதையடுத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கல்வி சங்கல்ப பூஜையில் மாணவ, மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு பேனா, குறிப்பேடுகள் வழங்கப்பட்டது. கல்வியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டு எளிதாக மாணவர்கள் தேர்வு எழுதும் வழி முறைகளை பற்றி பேசினர். இதில் அரசு பொது தேர்வு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. வங்கி, கல்லூரி தேர்வு எழுதும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story