துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி
வாணியம்பாடியில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
திருப்பத்தூர்
வாணியம்பாடியை அடுத்த ராமையன் தோப்பு பகுதியில் உள்ள தர்மராஜா மற்றும் திரவுபதி அம்மன் கோவிலில் மகாபாரத சொற்பொழிவு கடந்த மார்ச் மாதம் 3 தேதி தொடங்கி 67 நாட்களாக நடைபெற்று வருகிறது. 67-வது நாளான நேற்று மகாபாரதத்தின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நடைபெற்றது.
இதில் நாடக கலைஞர்கள் கலந்துகொண்டு துரியோதனின் ராட்சத உருவத்தை உருவாக்கி பீமன் தன் கையில் வைத்துள்ள கதாயுதத்தால் துரியோதனின் முட்டி பகுதியில் தாக்கி படுகளம் செய்தார். அப்போது துரியோதனின் முட்டியில் இருந்து பீய்ச்சி அடிக்கும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தன் கூந்தலில் தடவி முடிச்சி போட்டு கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் நாடக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story