கிருஷ்ணகிரியில் குடிபோதையில் அட்டகாசம்: ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மதுபாட்டில்களை வீசிய கும்பல்


கிருஷ்ணகிரியில் குடிபோதையில் அட்டகாசம்:  ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மதுபாட்டில்களை வீசிய கும்பல்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

கிருஷ்ணகிரியில் குடிபோதையில் அட்டகாசம்: ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து மதுபாட்டில்களை வீசிய கும்பல்

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் மாவட்ட மைய நூலகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் பின்புறம் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் கட்டிடம் உள்ளது. மாவட்ட மைய நூலகத்தில் அரசு பணிகளுக்கான பயிற்சி வகுப்பும், ஆசிரியர் கழக கட்டிடத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்ககூடிய மதுப்பிரியர்கள், மாவட்ட மைய நூலக கட்டிடம் மற்றும் ஆசிரியர் கழக கட்டிடம் அருகில் அமர்ந்து மது குடித்து விட்டு பாட்டில்களை ஜன்னல்கள் மீது வீசி உடைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆசிரியர் கழக கட்டிடத்தில் உள்ள ஜன்னல்களை மது போதையில் ஆசாமிகள் பாட்டில்களை வீசி சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 2-வது முறையாக மதுபோதையில் மர்மநபர்கள் ஆசிரியர் கழக கட்டிட ஜன்னல் கண்ணாடிகள் மீது பாட்டில்களை வீசி உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலக கட்டிடம் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் மதுபோதையில் தொடர்ந்து சிலர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு போதையில் சுற்றும் நபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story