விழுப்புரம் அருகே போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


விழுப்புரம் அருகே போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 24 Jun 2023 6:45 PM GMT (Updated: 24 Jun 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு கிராமத்தில் விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கள்ளச்சாராயம், மதுபானம் மற்றும் கஞ்சா விற்கக்கூடாது என மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தலைமையில் கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு அதுபோன்று யாரேனும் விற்பனை செய்தால் அவர்களை பற்றி உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தினர்.

மேலும் இந்நிகழ்ச்சியின்போது கள்ளச்சாராயம், மதுபானம் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இல்லாத கிராமமாகவும், எங்களது கிராமத்தில் இதுபோன்ற சமூகவிரோத செயல்கள் நடைபெற நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் நன்னாடு கிராம மக்கள், போலீசாரின் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


Next Story