போதை பொருள் விழிப்புணர்வு முகாம்


போதை பொருள் விழிப்புணர்வு முகாம்
x

ஜோலார்பேட்டையில் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு, சாலை பாதுகாப்பு, மாணவர்கள் உடல்நலம் மற்றும் மனநலம் காத்தல் குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமை தாங்கினார். மலைவாழ் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சரஸ்வதி, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மேனகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சக்தி சுபாஷினி, ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, தீயணைப்பு நிலைய அலுவலர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் வரவேற்றார்.

மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி பேசுகையில் பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் கல்வி கற்பதில் கவனம் செலுத்தி எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் எந்தவிதமான தீய பழக்கத்திற்கும் ஈடுபடாமல் நம்மையும், நம்மை சார்ந்துள்ள குடும்பம் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ளவர்களுக்கு நல்லொழுக்கத்தை ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்தும் நபர்களிடமிருந்து விலகி இதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட அலுவலர், சமூக ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் போதைப்பொருள் தடுப்பு குறித்து அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.


Related Tags :
Next Story