வாரத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம்


வாரத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம்
x

வாரத்தில் 2 நாட்கள் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.

விருதுநகர்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விருதுநகர் நகர குழு கூட்டம் விஜயபாண்டி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் முருகன், நகர சபை கவுன்சிலர் ஜெயக்குமார் உள்ளிட்ட நகர்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விருதுநகர் நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு 16 முதல் 17 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் ஆனைக்குட்டம் அணை பகுதியில் இருந்து வழங்கப்படும் குடிநீரானது உப்புத்தன்மை உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இதை உபயோகிக்கும் மக்களுக்கு இருமல், தொண்டை வலி, காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுவதோடு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே குடிநீர் வரி செலுத்தும் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க வேண்டியது நகராட்சி நிர்வாகத்தின் கடமையாகும். ஒண்டிப்புலி, ஆனைக்குட்டம் ஆகிய பகுதிகளிலிருந்து எடுக்கும் தண்ணீரை சுத்திகரித்து வழங்க வேண்டும். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து முழுமையாக குடிநீரை பெற்று வாரம் 2 முறையாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மேலும் விருதுநகரில் கழிவுநீரேற்று நிலையங்கள் இயங்காத நிலையில் உள்ளது. இதனால் வீடுகளுக்கு குடிநீருடன் கழிவு நீரும் சேர்ந்து வருகிறது. எனவே கழிவுநீரேற்று நிலையத்தை செயல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும.் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விருதுநகரில் குடிநீர் வினியோகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


Next Story