திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம்
கடையநல்லூரில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க. இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கடையநல்லூரில் நடந்தது. கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆறுமுகச்சாமி வரவேற்றார். கூட்டத்தில் திராவிட இயக்க வரலாறு குறித்து அப்துல்லா எம்.பி.யும், மாநில சுயாட்சி குறித்து மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னாவும் பேசினர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முத்துவேல் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹக்கீம் தொகுத்து வழங்கினார்.
முன்னதாக அப்துல்லா எம்.பி.க்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் மாவடிக்கால் சுந்தரமகாலிங்கம், முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, தலைமை செயற்குழு உறுப்பினர் சேக்தாவூது, தென்காசி யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நகராட்சி தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், நகர செயலாளர்கள் அப்பாஸ், வக்கீல் வெங்கடேசன், யூனியன் துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ், கவுன்சிலர்கள் முருகன், முகைதீன்கனி, தலைமை கழக பேச்சாளர் இஸ்மாயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.