நாய் கண்காட்சி


நாய் கண்காட்சி
x

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாய் கண்காட்சி நடந்தது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில்அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இதில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாய் கண்காட்சி நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் கோல்டன் ரெட் ரைவர், ஜெர்மன் ஷப்பர்டு, லேப்ராடர், பக்ஸ், சைப்ரீயன், ஷிஸ்கி, பிரஞ்ச் புல்டாக், டால்மேசன், பாக்சர், டாபர்மேன், சிப்பிபாறை, கார்க்கர், ஸ்பேனியல் உள்பட பல்வேறு ரகங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. ஒவ்வொரு இனவகைகள் சுற்றுபாதையில் நடைகள் மற்றும் சிறப்பு ஆய்வுகள் செய்யப்பட்டு சிறந்த நாய் வகைகள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட நாய்களின் உரிமையாளர்களுக்கு கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.

இந்த போட்டியில் கால்நடை மருத்துவக்கல்லூரி சென்னை பேராசிரியர் நாகராஜன் நடுவராக பங்கேற்று சிறந்த நாய்களை தேர்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை சார்பாக பங்குபெற்ற நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர்கள் மரியசுந்தர், அருள்ராஜ், கலையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன் மற்றும் கால்நடைத்துறை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story