சிறுமி கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சிறுமி கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சிறுமி கர்ப்பத்துக்கு காரணமானவரை கண்டுபிடிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 48). இவர் பழ வியாபாரம் செய்தார். கடந்த 2018-ம் ஆண்டு, 13 வயது சிறுமிக்கு மாரியப்பன் பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், இதில் அந்த சிறுமி கர்ப்பமாகி, குழந்தை பெற்றதாகவும் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் மாரியப்பனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மாரியப்பனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி முரளி சங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

டி.என்.ஏ. பரிசோதனை மாரியப்பனுக்கு சாதகமாக உள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க முயற்சி செய்யவில்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

மேலும் சிறுமிக்கு பிறந்த குழந்தை ரத்த மாதிரிகள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்களை பிடித்து அவர்களின் டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த விசாரணையை 4 மாதத்தில் போலீசார் முடிக்க வேண்டும். மாரியப்பனுக்கு கீழ்கோட்டு விதித்த தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story