தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரசாரம்


தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரசாரம்
x

தி.மு.க. அரசின் சாதனை விளக்க பிரசாரம் நடைபெற்றது.

விருதுநகர்

ஆலங்குளம்

ஆலங்குளம் டி.என்.சி. முக்கு ரோட்டில் வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க. இளைஞரணி சார்பில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சூரியநாராயணன் தலைமை தாங்கினார். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய தி.மு.க.செயலாளர் எதிர்கோட்டை ஜெயபாண்டியன் முன்னிலை வகித்தார். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மகேஸ்வரன் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் சரத்பாலா சிறப்புரை ஆற்றினார். இதில் சாத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கடற்கரை ராஜ், சாத்தூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் முருகேசன், விருதுநகர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள், சாத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story