வேகமெடுக்கும் திமுக தேர்தல் பணி: இன்று தேர்தல் அறிக்கை குழு கூட்டம்


வேகமெடுக்கும் திமுக தேர்தல் பணி: இன்று தேர்தல் அறிக்கை குழு கூட்டம்
x

திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தங்களை முழுவீச்சில் தயார்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான கட்சி பணிகளை ஒருங்கிணைக்க திமுக 3 குழுக்களை சமீபத்தில் அமைத்தது. இதையடுத்து திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கனிமொழி எம்.பி தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு நடைபெற உள்ளது. தேர்தல் அறிக்கை குழுவில் டி.கே.எஸ் இளங்கோவன், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, மேயர் பிரியா உள்பட 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story