கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்த தி.மு.க.


கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணித்த தி.மு.க.
x

கோப்புப்படம்

அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தெரிவிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை,

நாட்டின் 78வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதையொட்டி விடுதலைப் போராட்ட வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொது பிரமுகர்களுக்கு தேநீர் விருந்து வழங்குவது கவர்னரின் வழக்கமான நடவடிக்கையாகும். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி, தி.மு.க., அ.தி.மு.க. , காங்கிரஸ், பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு கவர்னர் மாளிகை அழைப்பு விடுத்திருந்தது.

இந்த சூழலில் மாநில அரசுக்கு எதிராக செயல்படுவதால் கவர்னர் ஆர்.என். ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் அறிவித்திருந்தன.

இந்நிலையில் கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தி.மு.க. சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார். மேலும் அரசு சார்பில் பங்கேற்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தெரிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்

இதனிடையே நாளை கவர்னர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அ.தி.மு.க. அறிவித்துள்ளது. அ.தி.மு.க, சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் , பெஞ்சமின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story