மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தாா்.
அம்மாப்பேட்டை;
அம்மாப்பேட்டை வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்ட செயலாக்கத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அருந்தவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராம சேவை மைய கட்டிடத்தில் சுவர் விளம்பரத்தை பார்வையிட்டும், விளம்பர பலகைகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தார். மேலும் திட்ட வரைவு அறிக்கை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அருந்தவபுரத்தில் விவசாயி ஒருவர் தோட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள நிழல் வலை கூடாரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சூழியக்கோட்டை ஊராட்சியில் செந்தில் என்பவரது நானோ யூரியா தெளிக்கப்பட்ட வயல்வெளியில் வரப்புகளில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா, தோட்டக்கலை துறை இயக்குனர் (வேளாண் நேர்முக உதவியாளர்) கோமதி தங்கம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தஞ்சாவூர் கலைச்செல்வன், வேளாண்மை உதவி இயக்குனர் (பயிர் காப்பீடு) சாருமதி, வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் பரிமேலழகர், ஊராட்சி தலைவர் சரிதா ஆசைதம்பி, தஞ்சாவூர் துணை வேளாண் அலுவலர் மனோகரன், உதவி வேளாண் அலுவலர் ராமு ஆகியோர் இருந்தனர்.