விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம்
சிங்கம்புணரி தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் அருள்ராஜ் தலைமையில் 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர். அதில் தீ விபத்து மற்றும் பிற விபத்துகளை தவிர்க்க எளிதில் தீப்பிடிக்கும் அமைப்பில் வீடு, நிழல் பந்தல் அமைக்க வேண்டாம். திறந்த விளக்குகளை பயன்படுத்த வேண்டாம். ஸ்டவ் அடுப்புகளை எரியும்போது மண்எண்ணெய் நிரப்ப வேண்டாம். வாயு கசிவு இருந்தால் ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும். மின் வயர்களை திறந்த நிலையில் பயன்படுத்த கூடாது. விழாக்காலங்களில் வெடிகளை பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும். தீ விபத்து ஏற்பட்டால் முதலில் உயிரை காப்பாற்றி கொள்ள வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பஸ் நிலையம் மற்றும் திண்டுக்கல்-காரைக்குடி சாலை, பெரிய கடை வீதி போன்ற பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் தீயணைப்பு துறையினர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.