காப்புக்காட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய பா.ம.க.வினர்


காப்புக்காட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய பா.ம.க.வினர்
x

கள்ளக்குறிச்சி அருகே காப்புக்காட்டில் பிளாஸ்டிக் கழிவுகளை பா.ம.க.வினர் அகற்றினர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே வாணவரெட்டி கிராம பகுதியில் உள்ள காப்புக்காடு நடுவே செல்லும் தார் சாலையின் இரு புறமும் பிளாஸ்டிக், மருந்து கழிவுகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன .இதனால் காப்புக்காட்டில் உள்ள வன விலங்குகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது. இதையடுத்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநில மாணவர் சங்க துணை செயலாளர் மணி தலைமையில் கிளை செயலாளர்கள் குமார், அய்யாசாமி மற்றும் சக்ரவர்த்தி, துரை, மணிவண்ணன், ராஜமாணிக்கம் மற்றும் பொதுமக்கள் அந்த கழிவு பொருட்களை அகற்றி சுத்தம் செய்தனர். இந்த பணி வனத்துறையினர் அக்ஷயசாமி, சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையில் நடந்தது.


Next Story