பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி


பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி
x

வாய்மேடு தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு வெள்ளம் மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாய்மேடு தீயணைப்பு நிலைய அலுவலர் பூபதி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தார். வாய்மேடு கூட்டுறவு சங்கம் எதிரே உள்ள வாய்க்காலில் பேரிடர் காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பாற்றுவது? என வாய்மேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் பொதுமக்களுக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்தனர். நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளர் அன்பரசன், வாய்மேடு இலக்குவனார் பள்ளி ஆசிரியர் மணிமொழி மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story