பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x
தினத்தந்தி 5 Aug 2023 6:45 PM GMT (Updated: 5 Aug 2023 6:46 PM GMT)

திருக்கோவிலூர் அருகே பச்சையம்மன் கோவிலில் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூர் கிராமத்தில் மன்னார்சாமி உடலுறவை பச்சையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன், விபூதி உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. அதன்பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்ட அக்னி குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கரக உற்சவம்

முன்னதாக நேற்று முன்தினம் கரக உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க திருக்கோவிலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story