திருவாமாத்தூர்திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்


திருவாமாத்தூர்திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 9 July 2023 6:45 PM GMT (Updated: 9 July 2023 6:45 PM GMT)

திருவாமாத்தூர் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே திருவாமாத்தூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம், விநாயகர் வழிபாடு, மகா சங்கல்பம், வாஸ்துசாந்தி, பிரவேச பலி, முதல் கால யாக சாலை பூஜை, மகா பூர்ணகுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளான நேற்று அதிகாலை 5.30 மணி முதல் ஜபஹோமம், நாடி சந்தானம், 2 மற்றும் 3-ம் கால யாக சாலை பூஜைகள் முடிந்ததும் கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து காலை 8.30 மணிக்கு திரவுபதியம்மன் கோவில் கோபுர விமான கலசத்தின் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதில் திருவாமாத்தூர், எடப்பாளையம், சோழகனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தாிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.


Next Story