நிலஅளவை அலுவலர்கள் சார்பில் தர்ணா


நிலஅளவை அலுவலர்கள் சார்பில் தர்ணா
x

நிலஅளவை அலுவலர்கள் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

அரியலூர்

தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் சார்பில் 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. நில அளவை பதிவேடுகள் துறையின் கோட்ட ஆய்வாளர் நாகமுத்து தலைமை தாங்கினார். இதில் அரியலூர் கோட்ட தலைவர் சுதாகர், அரியலூர் குறுவட்ட அளவர் செல்வம், வட்ட துணை ஆய்வாளர் வெற்றிசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், கள பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும், களப்பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை முற்றிலுமாக கைவிட வேண்டும். நிலஅளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். தமிழகம் முழுவதும் நவீன மறுநில அளவை திட்டம் தொடங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டோம். மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 23-ந் தேதி திருச்சியில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.


Next Story