சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா


சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா
x

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர்

கோரிக்கைகள்

காலை சிற்றுண்டி உணவுத்திட்டத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்திவிட்டு அனைத்து பள்ளிகளிலும் விரிவுபடுத்தி திட்டம் சிறப்படைய, கட்டமைப்பு வசதியுடன் உள்ள பள்ளி சத்துணவு மையசத்துணவு ஊழியர்களிடம் வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு ஊதியக்குழுவால் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்கிட வேண்டும்.

போராட்டம்

காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்பட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை களை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story