பாதாள செம்பு முருகன் கோவிலில் கருங்காலி மாலைகள் சாத்தி பக்தர்கள் வழிபாடு


பாதாள செம்பு முருகன் கோவிலில் கருங்காலி மாலைகள் சாத்தி பக்தர்கள் வழிபாடு
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

பாதாள செம்பு முருகன் கோவிலில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி கருங்காலி மாலைகள் சாத்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

திண்டுக்கல்

ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி போகர் நகரில் உள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில், வைகாசி மாத பவுர்ணமியையொட்டி சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. குறிப்பாக 108 பக்தர்கள், 108 கருங்காலி மாலைகளை சாத்தி பாதாள செம்பு முருகனை வழிபடும் சிறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதேபோல் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ரியல் எஸ்டேட் அதிபா்கள் என பல்வேறு தரப்பினர் தலா 8 கருங்காலி மாலைகளை சாத்தி வேண்டுதல் செய்தனர். இவர்கள் பாதாள செம்பு முருகனுக்கு சாத்திய கருங்காலி மாலைகளை மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர்கள், முடிதிருத்தும் தொழிலாளர்கள், கூலித்தொழிலாளிகளுக்கு தானமாக வழங்கினர். மேலும் திருமண தடை நீங்குவதற்கு 2 கருங்காலி மாலைகளை வாங்கி, பாதாள செம்பு முருகனுக்கு ஒரு மாலையும், பக்தர் ஒரு மாலையும் அணிந்து வழிபட்டனர்.

விழாவையொட்டி பாதாள செம்பு முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் ஆதினம் சித்த அருள் சுவாமி அறிவாதினம், பக்தர்களுக்கு மூலிகை திருநீறை பிரசாதமாக வழங்கினார்.


Related Tags :
Next Story