ஞானஸ்கந்தன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலம்


ஞானஸ்கந்தன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலம்
x
தினத்தந்தி 8 March 2023 6:47 PM GMT (Updated: 8 March 2023 7:20 PM GMT)

ஞானஸ்கந்தன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்.

கரூர்

கரூர் கே.வி.பி.நகரில் பிரசித்தி பெற்ற ஞானஸ்கந்தன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கணபதி, சத்திய நாராயணர், ஆஞ்சநேயர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்ததையடுத்து கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு நடக்க உள்ளது. இதையடுத்து நேற்று மாைலயில் திரளான பக்தர்கள் கரூர் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து கரூர் பஸ் நிலையம் ரவுண்டானா பகுதிக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து மேளதாளங்கள் முழங்க கோவை சாலை வழியாக 80 அடி சாலை, சின்ன கொங்கு மண்டபம் ரோடு, எம்.ஜி.ரோடு வழியாக ஊர்வ லமாக கோவிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னா் மங்கள இசை, விநாயகர் வழிபாடு, பஞ்சகவ்யம், வாஸ்து பூமி பூஜை, முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் விஷ்ணு ஜூவல்லர்ஸ் சண்முகம், செயலாளர் மணீஸ் டெக்ஸ் மகேஸ்வரன், பொருளாளர் பழனிச்சாமி, பொதுமக்கள், ஞானஸ்கந்தன் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


Next Story