அறந்தாங்கியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ்கள் இயக்க பக்தர்கள் கோரிக்கை


அறந்தாங்கியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ்கள் இயக்க பக்தர்கள் கோரிக்கை
x

அறந்தாங்கியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ்கள் இயக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை

திருச்செந்தூர் முருகன் கோவில்களில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகப்பெருவிழா, ஆவணி திருவிழா, கந்த சஷ்டி, மாசி திருவிழா போன்ற விழாக்கள் மிகச்சிறப்பு வாய்ந்ததாகும், கந்த சஷ்டி விழாவில் ஒருவாரம் பக்தர்கள் விரதம் இருப்பார்கள். மேற்கண்ட விழா நாட்களில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி கொள்வார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார முருகபக்தர்கள் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்வது வழக்கம். இவ்வாறு செல்லும் பக்தர்களுக்கு அறந்தாங்கியில் இருந்து திருச்செந்தூர் செல்வதற்கு போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இவர்கள் திருச்சி மற்றும் மதுரை சென்று அங்கிருந்து தூத்துக்குடி வழியாக திருச்செந்தூருக்கு மாறி மாறி பஸ்களில் செல்ல வேண்டி உள்ளது. இல்லையென்றால் தஞ்சாவூர் சென்று அங்கிருந்து ஈ.சி.ஆர்.ரோட்டில் திருச்செந்தூர் வழியாக செல்ல வேண்டும். இதனால் நேரம் அதிகமாவதுடன், வீண் அலைச்சலும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது. எனவே அறந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்களின் நலன் கருதி அறந்தாங்கியில் இருந்து திருச்செந்தூருக்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story