அக்னி தீர்த்த கடற்கரை, தீர்த்த கிணறுகளில் புனித நீராட குவிந்த பக்தர்கள்


அக்னி தீர்த்த கடற்கரை, தீர்த்த கிணறுகளில் புனித நீராட குவிந்த பக்தர்கள்
x

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் தீர்த்த கிணறுகள் மற்றும் அக்னி தீர்த்த கடல் பகுதியில் நீராட பக்தர்கள் குவிந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ஆடி மாத பிறப்பை முன்னிட்டு ராமேசுவரம் கோவில் தீர்த்த கிணறுகள் மற்றும் அக்னி தீர்த்த கடல் பகுதியில் நீராட பக்தர்கள் குவிந்தனர்.

ஆடி மாத பிறப்பு

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருக்கும்.

இந்த நிலையில் ஆடி மாத பிறப்பு மற்றும் விடுமுறை நாளான ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாகவே இருந்தது.

புனித நீராடிய பக்தர்கள்

இதையொட்டி அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி மகிழ்ந்தனர். பின்னர் பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராட சென்றனர். இதன் காரணமாக கோவிலின் வடக்கு கோபுர வாசல் பகுதியில் இருந்து கிழக்கு ரத வீதி வாசல் வரையிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று தீர்த்த கிணறுகளில் புனித நீராடினர்.

புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள சாமி மற்றும் அம்பாள் பிரகாரத்தை இலவச மற்றும் சிறப்பு தரிசன பாதையில் நின்று தரிசனம் செய்து சென்றனர். இதேபோல் தனுஷ்கோடி அரிச்சல் முனை கம்பிப்பாடு கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.


Next Story