சதுரகிரியில் குவியும் பக்தர்கள்


சதுரகிரியில் குவியும் பக்தர்கள்
x

சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிகிறார்கள்

விருதுநகர்

வத்திராயிருப்பு,

சதுரகிரியில் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் குவிகிறார்கள்

சதுரகிரி கோவில்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று நடக்கிறது.

இதையொட்டி தரிசனத்துக்கு 6 நாள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று சுதந்திர தின விடுமுறை என்பதால் தரிசனத்துக்கு ஏராளமானோர் குவிந்தனர். தாணிப்பாறை வனத்துறை கேட்டில் இருந்து, காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக மலைப்பாதை வழியாக நடந்து சதுரகிரியை அடைந்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இன்று ஆடி அமாவாசை

இன்று ஆடி அமாவாசையை என்பதால், 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்து, சாமி தரிசனம் செய்வார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்தர்கள் விரைவாக தரிசனம் முடித்து திரும்புவதற்கு வசதியாக கோவிலில் இருந்து அடிவாரம் வரை மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவக்குழுவினர், பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பல்வேறு ஊர்களில் இருந்து 120 சிறப்பு பஸ்கள் தாணிப்பாறை வரை இயக்கப்படுகின்றன.

திடீர் தீ

இதற்கிடையே நேற்று மாலை சதுரகிரி மலையில் களத்துப்பாறைமேடு பகுதியில் மின்னல் காரணமாக திடீரென தீப்பிடித்தது. ஆனால், அதிகாரிகள், வனத்துறையினர் விரைந்து செயல்பட்டு 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.


Next Story