ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள்


ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள்
x

ஆடுதுறையில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்

திருவிடைமருதூர்:

ஆடுதுறையில் ரூ.1 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்வது என பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

கும்பகோணம் அருகே ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கமலா சேகர் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ராம்பிரசாத் வரவேற்று பேசினார். பேரூராட்சி கவுன்சிலர்கள் கோ.சி.இளங்கோவன், ம.க.பாலதண்டாயுதம், குமார், சரவணன், ஹமீம்நிஷாஷாஜகான், கண்ணன், மீனாட்சி முனுசாமி, சுகந்தி சுப்பிரமணியன், சாந்தி குமார், மாலதி ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் முத்துபீவி ஷாஜகான் நன்றி கூறினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தூய்மை இந்தியா திட்டம்

15-வது நிதிக்குழு மானிய தொகை முதல் தவணை ரூ.15.26 லட்சத்தில் 50 சதவீதம் தொகை சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கும், மேலும் 50 சதவீதம் குடிநீர், மழை நீர் சேகரிப்பு மற்றும் மறுசுழற்சி பயன்பாடு பணிகள் மேற்கொள்ளவதற்கும் பயன்படுத்துவது.

தூய்மை இந்தியா இயக்கம் திட்டம் 2.0-ன் கீழ் வளம் மீட்பு பூங்காவில் மக்கும் கழிவுகளை தீர்வு செய்வதற்கான செயலாக்கம் ரூ.13.5 லட்சம் மதிப்பில் பணிகள் மேற்கொள்வது.

15-வது நிதிக்குழு அடிப்படை மானியம் முதல் தவணை ரூ.10.17 லட்சம் மதிப்பீட்டில் கஞ்சான் மேட்டு தெரு - கிருஷ்ணன் கோவில் தோப்பு தெரு இணைப்பு பாலம் தடுப்புச் சுவருடன் ரூ.4 லட்சம் மதிப்பிலும், புது முஸ்லிம் தெருவில் சிறு பாலம் தடுப்புச் சுவருடன் ரூ.6.2 லட்சம் மதிப்பிலும் கட்டுவது.

ரூ.1 கோடி

ரூ.11.5 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவறை மற்றும் எரிபொருள் வைப்பறை அமைப்பது. கஞ்சான் மேட்டு தெரு, கஞ்சான் மேட்டு முஸ்லிம் தெரு, குறுக்குத்தெரு, பாத்திமா நகர் மேற்கு பகுதி, தெற்கு பகுதி, கிழக்குப் பகுதிகளில் ரூ.31.6 லட்சம் மதிப்பீட்டில் சாலைகளை புனரமைப்பது உள்பட ரூ.1 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Related Tags :
Next Story