சாலியமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


சாலியமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x

சாலியமங்கலம் ஊராட்சியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை ஒன்றியம் சாலியமங்கலம் ஊராட்சியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மஞ்சள் பைகளை வழங்கி பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்துமாறு வலியுறுத்தினார். தொடர்ந்து சாலியமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.50 லட்சம் மதிப்பில் நடந்து வரும் கூடுதல் வகுப்பறைகள் கட்டிடம் கட்டும் பணி, புதுப்பிக்கும் பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார். ஆய்வின்போது அம்மாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, உதவி பொறியாளர் கதிரேசன், ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், ஊராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story