ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்


ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
x

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

கரூர்

ஊரக உள்ளாட்சி தேர்தல்

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக இருந்த அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி வார்டு எண்.9, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்கூர் (மேற்கு) ஊராட்சி வார்டு எண்.5, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7, குளித்தலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கருப்பம்பாளையம் ஊராட்சி, வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பாளையம் ஊராட்சி வார்டு எண்.3 ஆகிய 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு

இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி வார்டு எண்.9, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்கூர் (மேற்கு) ஊராட்சி வார்டு எண்.5, குளித்தலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கருப்பம்பாளையம் ஊராட்சி, வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பாளையம் ஊராட்சி வார்டு எண்.3 ஆகிய 5 பதவியிடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3-amp;க்கு 3 வேட்பாளர்களும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7-க்கு 2 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதனால் அந்த பகுதிகளில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9-ந்தேதி நடைபெற்றது. இதில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3-ல் 72.7 சதவீத வாக்குகளும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7-ல் 73.80 சதவீத வாக்குகளும் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3-ல் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7-ல் பதிவான வாக்குகள் அடங்கிய வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டன.இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்திருந்த வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள், வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்ற வந்திருந்த அலுவலர்களை போலீசார் சோதனையிட்டு அடையாள அட்டை வைத்திருந்தவர்களை மட்டும் உள்ளே அனுமதித்தனர்.

சான்றிதழ்

முதலில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டு இருந்த அறையின் சீல் சரியாக காலை 8 மணி அளவில் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் உடைத்தனர். அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் வாக்குச்சீட்டு பிரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வாக்குப்பெட்டிகளின் சீல்கள் உடைக்கப்பட்டு, வாக்குச்சீட்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு, எண்ணப்பட்டன.தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட்டது. இதில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3-ல் ராஜேந்திரனும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7-ல் ஜெயபாலும் வெற்றிபெற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.


Next Story