ஸ்ரீவைகுண்டம் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
போதை பொருள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை- ஸ்ரீவைகுண்டம் புதிய துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய துணை சூப்பிரண்டாக மாயவன் பதவியேற்றுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாயவன் திருப்பூரில் பயிற்சி துைண சூப்பிரண்டாக பணியாற்றிய பின்னர் தற்போது ஸ்ரீவைகுண்டத்தில் பதவியேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
போதை பொருள் விற்பனையை முற்றிலுமாக ஒழித்தால் குற்றங்கள் நடைபெறாது. எனவே போதைப்பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, ஏரல் மற்றும் கருங்குளம் தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் மணல் கடத்துபவர் மீதும், பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப்பொருட்களை கொட்டுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
இதைத்தொடர்ந்து அவர் குமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு கூட்டத்தை நடத்தினார்.