ஸ்ரீபெரும்புதூரில் செப்டம்பர் 7-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை


ஸ்ரீபெரும்புதூரில் செப்டம்பர் 7-ந்தேதி வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை
x

ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் செப்டம்பர் 7-ந்தேதி வரை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சி பகுதிகளில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் செப்டம்பர் 7-ந்தேதி நள்ளிரவு வரை ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதித்து டி.எஸ்.பி. சுனில் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் பல்வேறு காரணங்களால் அசாதாரண சூழல் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அரசியல் கட்சியினர் கொடியேற்றுதல், பொதுக்கூட்டம் உள்ளிட்ட எந்த ஒரு நிகழ்வையும் முன் அனுமதி பெறாமல் நடத்தக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். இதை மீறுவோர் மீது சட்டரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Next Story