தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு


தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி சென்னையில் ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு
x

தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திருமாவளவன் அறிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது கள்ளக்குறிச்சி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

இதனிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருணாபுரத்திற்கு சென்றார். அங்கு விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய அவர், இறுதிச் சடங்கு செலவுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியான முடிவெடுத்து தமிழகத்தில் படிப்படியாக முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரும் 24-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.




Next Story