தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

திருவண்ணாமலையில் தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் மேரி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட சமூல நலத்துறையில் விண்ணப்பித்த தகுதியுள்ள அனைவருக்கும் உடனடியாக தையல் எந்திரம் வழங்க வேண்டும். திருவண்ணாமலை தையல் மகளிர் மேம்பாட்டு குடிசை கூட்டுறவு சங்கத்திலும், வந்தவாசி அன்னை சத்யா மகளிர் தையல் கூட்டுறவு சங்கத்திலும் புதிய உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும். மகளிர் தையல் கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வருடந்தோறும் 5 சதவீதம் கூலி உயர்வு, சிக்கன சேமிப்புக்கு வட்டி, இலவச மின்சாரம், இலவச தையல் எந்திரம் போன்றவை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட தையல் கலை தொழிலாளர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.



Next Story