வி.இ.டி.கல்லூரியில் 164 மாணவர்களுக்கு பட்டம்


வி.இ.டி.கல்லூரியில் 164 மாணவர்களுக்கு பட்டம்
x

காணை வி.இ.டி.கல்லூரியில் 164 மாணவர்களுக்கு சென்னை கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் பட்டம் வழங்கினார்

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

விழுப்புரம் அருகே காணை வி.இ.டி.கல்வியியல் கல்லூரியில் 6-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவரும், கல்லூரி தலைவருமான ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தானலட்சுமி செல்வராஜ், இயக்குனர்கள் துர்காதேவி, ராஜலட்சுமி, வெங்கடேசன் மற்றும் சித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக இயக்குனர் எஸ்.கார்த்தியராஜ் வரவேற்றார். முதல்வர் பி.பழனி ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை தமிழ்நாடு கல்வியில் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பி.கணேசன் கலந்து கொண்டு 164 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டி பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஆசிரியர் என்பவர் ஏணிப்படி போன்றவர் ஆவார். ஒரு ஆசிரியரிடம் படித்த மாணவன் சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வர முடியும் ஆனால் ஆசிரியரின் நிலை அதே இடத்தில் தான் இருக்கும். சாதாரண ஒரு மாணவனை உன்னத நிலைக்கு கொண்டு செல்ல ஆசிரியர்களால் மட்டுமே முடியும். எனவே பட்டம் பெரும் நீங்கள் இந்த சமுதாயத்தில் நல்ல மாணவர்களை உருவாக்குவேன் என்ற உறுதிமொழி ஏற்க வேண்டும். உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருக்க வேண்டும்.

நம்பிக்கை

ஒரு மாணவனை வழிநடத்த ஆசிரியரால் மட்டுமே முடியும். மாணவர்கள் ஆசிரியர்கள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருப்பார்கள். அந்த நம்பிக்கை வீணாகாத வண்ணம் ஆசிரியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், மாணவ,மாணவிகள், பெற்றோர்கள்,பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வி.இ.டி. வித்யாமந்திர் பள்ளியின் முதல்வர் மோகனாம்பாள் நன்றி கூறினார்.


Next Story