தரிசு நிலங்களை மேம்படுத்த ரூ.3 லட்சத்தில் ஆழ்துளை கிணறு
வளையாத்தூர் ஊராட்சியில்தரிசு நிலங்களை மேம்படுத்த ரூ.3 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படுவதை கலெக்டர் பார்வையிட்டார்.
கலவை
கலவையை அடுத்த வளையாத்தூர் ஊராட்சியில் கலைஞரின் கிராம ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தின் மூலம் 35 ஏக்கர் தரிசு நிலங்களை மேம்படுத்திட வேளாண்மை பொறியியல் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். மேலும் தரிசு நிலங்களை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு நெல் அறுவடை எந்திரம், டிராக்டர், விவசாய கருவிகள் மானிய விலையில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் என்று கலெக்டர் கூறினார்.
ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரன், மாவட்டவேளாண்மை இணை இயக்குனர் வேலாயுதம், துணை இயக்குனர் விஸ்வநாதன், திமிரி ஒன்றியக் குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, கலவை தாசில்தார் ஷமீம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, வருவாய் ஆய்வாளர் வீரராகவன், கிராம நிர்வாக அதிகாரிகள், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.