ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி


ஸ்கூட்டர் மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 21 Sep 2023 7:30 PM GMT (Updated: 21 Sep 2023 7:30 PM GMT)

ஸ்கூட்டர் மோதி முதியவர் பலியானார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் மத்தம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் பீரப்பா (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி இரவு இ.எஸ்.ஐ. சாலை ஏ.வி.எஸ். காலனி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஸ்கூட்டர் பீரப்பா மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story