கடலில் மிதந்து வந்த ஆண் பிணம்


கடலில் மிதந்து வந்த ஆண் பிணம்
x
தினத்தந்தி 2 Aug 2023 6:45 PM GMT (Updated: 2 Aug 2023 6:45 PM GMT)

கன்னியாகுமரியில் கடலில் மிதந்து வந்த ஆண் பிணத்தை கைப்பற்றி யார் அவர்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் கடலில் மிதந்து வந்த ஆண் பிணத்தை கைப்பற்றி யார் அவர்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடலில் மிதந்த ஆண் பிணம்

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்தநிலையில் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின்புறம் கடலில் நேற்று காலையில் ஒரு ஆண் பிணம் மிதந்து வந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் இதுபற்றி கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடலில் மிதந்த ஆணின் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பிணமாக மிதந்தவருக்கு 40 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர் சிவப்பு நிற சட்டையும், சந்தன நிற பேண்டும் அணிந்திருந்தார். ஆனால், இறந்தவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், தற்கொலை செய்தாரா அல்லது கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பலியானாரா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story