ஆபத்தான பைங்காட்டூர் பாசன வாய்க்கால் பாலம்


ஆபத்தான பைங்காட்டூர் பாசன வாய்க்கால் பாலம்
x

ஆபத்தான பைங்காட்டூர் பாசன வாய்க்கால் பாலம்

திருவாரூர்

கோட்டூர்:

கோட்டூர் அருகே ஆபத்தான பைங்காட்டூர் பாசன வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான பாலம்

கோட்டூர் அருகே பைங்காட்டூர் கிராமத்தில் கோரையாறு பிரிவில் இருந்து அக்கறை கோட்டகம், சந்தானம் நல்லூர், நல்லூர் மற்றும் பல கிராமங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது பைங்காட்டூரில் கட்டப்பட்டுள்ள பாசன வாய்க்கால் சிறிய பாலம் பழுதடைந்துள்ளது. இந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டு எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது.

தென்பரை, ராதாநரசிம்மபுரம், வல்லூர், பாளையக்கோட்டை, பாலையூர், கெழுவத்தூர் ஆகிய பகுதியை சேர்ந்த கிராம மக்கள் இருசக்கர வாகனத்தில் ஒரத்தூர் பாலம், பைங்காட்டூர் வழியாக வந்து கோட்டூர், திருத்துறைப்பூண்டி, திருவாரூர் ஆகிய நகரங்களுக்கு செல்வதற்கு அதிக அளவில் இந்த பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

புதிய பாலம் கட்டப்படுமா?

இந்த பாலம் இடிந்து விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுவார்கள். மேலும் இந்த வாய்க்காலில் பாசனத்துக்கு தடை ஏற்பட்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் தயார் செய்யப்பட்ட குறுவை நாற்றுகள் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வீணாக கூடிய சூழ்நிலை ஏற்படும்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆபத்தான பாலத்தை உடனடியாக அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--



Related Tags :
Next Story