குடிநீர் வினியோகம் பாதிப்பு


குடிநீர் வினியோகம் பாதிப்பு
x

அருப்புக்கோட்டை அருகே தாமிரபரணி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் பாதிக்கும் சூழல் உள்ளதால் சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே தாமிரபரணி குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் பாதிக்கும் சூழல் உள்ளதால் சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் வினியோகம்

அருப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் மற்றும் வைகை குடிநீர் மூலம் சுழற்சி முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தாமிரபரணி குடிநீர் தூத்துக்குடி வல்லநாடு பகுதியில் இருந்து குழாய்கள் மூலம் நகராட்சி பகுதிகளுக்கு கொண்டுவரப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. இதற்கான பராமரிப்பு பணிகளை குடிநீர் வடிகால் வாரியத்தினர் செய்து வருகின்றனர். அவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீர் குழாய்கள் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் குழாய்கள் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுவதால் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது.

சிக்கனம்

இந்தநிலையில் தற்போது அருப்புக்கோட்டை அருகே உள்ள எப்போதும் வென்றான் பகுதியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் நகராட்சியில் 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குடிநீர் வினியோகம் சீராக இன்னும் 10 நாட்கள் தேவைப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே நகர் மக்கள் தாமிரபரணி கூட்டு குடிநீர் முறையாக வரும் வரை, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


Next Story