கீழஅரசூர் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?


கீழஅரசூர் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா?
x

கொள்ளிடம் அருகே கீழஅரசூர் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்;

கொள்ளிடம் அருகே கீழஅரசூர் செல்லும் சாலை சீரமைக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

சேதமடைந்த சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அரசூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சேர்ந்த சிறு கிராமம் கீழஅரசூர் ஆகும். கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் ெரயில்வே மேம்பாலம் பகுதியில் இருந்து கிளைச்சாலை பிரிந்து கீழ அரசூர் கிராமத்துக்கு செல்கிறது. இங்கு சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல் கொள்முதல் நிலையம், ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கிராமத்துக்கு செல்லும் ஒரு கிலோ மீட்டர் தூர தார் சாலையை சீரமைத்து 10 வருடங்கள் ஆகிறது.

இடையூறு

இதனால் சாலையில் உள்ள கருங்கல் ஜல்லிகள் சாலையில் உள்ள மண்ணுக்குள் புதைந்து மேடும் பள்ளமுமாக உள்ளது. எனவே இருசக்கர வாகனம் மற்றும் கார், லாரிகள் போன்ற வாகனங்கள் செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும் கொள்ளிடம்- சிதம்பரம் சீர்காழி போன்ற பகுதிகளுக்கு செல்லும் மாணவர்கள், விவசாயிகள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

சீரமைக்க கோரிக்கை

குறிப்பாக மழை பெய்யும் போது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்களும் நடந்து செல்பவர்களும் மேடு பள்ளம் தெரியாமல் தடுமாறி விழுந்து காயமடைகிறார்கள்.இந்த சாலையை மேம்படுத்தக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கீழஅரசூருக்கு செல்லும் சாலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story