தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டி

கன்னியாகுமரி

சேதமடைந்த மின்கம்பம்

தோவாளை தாலுகா திருமலைபுரம் கிராமத்தில் தெற்கு தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மீது அந்த வழியாக சென்ற வாகனம் மோதியதால் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலையில் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்த கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-த.இளையபெருமாள், .திருமலைபுரம்.

விபத்து அபாயம்

கருங்கலில் இருந்து குளச்சல் செல்லும் சாலையில் கருமாவிைள உள்ளது. இந்த பகுதியில் சாலையின் நடுவே ஜல்லிகள் பெயர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி பள்ளத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுனில்குமார், கருங்கல்.

வாகன ஓட்டிகள் அவதி

தொலையாவட்டம் பஸ்நிலையத்தில் இருந்து கிள்ளியூர் தாசில்தார் அலுவலகத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் திருப்பத்தில் ஒரு பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவகுமார், தொலையாவட்டம்.

வீணாகும் குடிநீர்

அழகியமண்டபத்தில் இருந்து மேக்காமண்டபம் செல்லும் சாலையில் கடமலைக்குன்று உள்ளது. அந்த பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனை அருகில் குழாய் உடைந்து குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

-ஜெஸ்பின், சிராயன்குழி.

மின்கம்பத்தை மாற்ற வேண்டும்

அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வெள்ளையந்தோப்பில் ஈச்சன்விளை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய கம்பத்தை நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பி.ராகவன், வெள்ளையந்தோப்பு.


Next Story