தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

ஆபத்தான மின்கம்பம்

திருச்சி கே.கே.நகர் கிருஷ்ண மூர்த்தி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஒரு மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் ஆபத்தாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கே.கே.நகர்

பக்தர்கள் அவதி

திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா.பேட்டை அருகே தலைமலையில் பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் கோவிலின் அடிவாரத்தில் இருந்து உச்சிக்கு செல்லும் வரை சுமார் கிலோ மீட்டர் தூரம் கரடு முரடாக உள்ளது. இதனால் கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சாலை வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தா.பேட்டை

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கோட்டாத்தூர் கீழக்குன்னுப்பட்டி வழகியாக தினமும் துறையூருக்கு காலை நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் காலையில் சீக்கிரமாக சென்று விடுகிறது. இதனால் காலை 8 மணிக்கு மேல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சில நேரங்களில் காலையில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகமாக உள்ளது. எனவே காலை 8 மணிக்கு மேல் கூடுதலாக பஸ் இயக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

கார்த்திக், கோட்டத்தூர்.

குண்டும், குழியுமான சாலை

திருச்சி வயலூர் அருகே உள்ள கோனார் சத்திரம் முதல் இனியானூர் வரை செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் மேடு, பள்ளம் தெரியாமல் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமலாவதிதாமரை, கோப்பு

மேம்பாலம் கட்ட கோரிக்கை

திருச்சி மாவட்டம், வையம்பட்டி கிராமம் திண்டுக்கல்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த நெடுஞ்சாலையுடன் கரூர், பொன்னமராவதி ஆகிய நெடுஞ்சாலைகள் இணைவதால் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. எனவே வையம்பட்டி-பொன்னமராவதி சாலையில் உள்ள ரெயில் கேட்டில் உயர்மட்ட மேம்பாலம்கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வையம்பட்டி.


Next Story