'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் எதிரில் எட்டயபுரம் சாலையில் ரெயில்வே மேம்பாலத்தில் மூன்று முக்கு சந்திப்பு உள்ளது. அந்த இ்டத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரிவிக்கும் வகையில் எச்சரிக்கை பலகை இல்லாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக வாசகர் வேணுராமலிங்கம் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக அங்கு எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

குண்டும் குழியுமான சாலை

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் மெயின் பஜாரில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. மழைக் காலத்தில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கருணாநிதி, வீரவநல்லூர்.

தெருவில் ஓடும் கழிவுநீர்

ராதாபுரம் தாலுகா திருவம்பலபுரம் பஞ்சாயத்து பார்க்கநேரி மேலூரில் கோவில் தெருவில் முறையான வாறுகால் வசதி இல்லை. இதனால் தெருவில் கழிவுநீர் ஆறாக ஓடி வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாறுகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

பிரவின்குமார், பார்க்கநேரி.

ரெயில் நிலையத்தில் நாய் தொல்லை

நெல்லை ரெயில் நிலையத்தில் பயணிகள், குழந்தைகளை அச்சுறுத்தும் விதமாக நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. எனவே நாய்களை அப்புறப்படுத்த ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாரியப்பன், செங்கோட்டை.

குடிநீர் நல்லி பொருத்தப்படுமா?

திசையன்விளை பேரூராட்சி 2-வது வார்டு இட்டமொழி ரோட்டில் அமைந்துள்ள தெருக்குழாயி்ல் நல்லி இல்லை. இதனால் குடிநீரை பிடிக்க முடியாமல் தண்ணீர் வீணாகிறது. எனவே அதனை சரிசெய்து நல்லி அமைத்துக் கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அல்பர்ட், திசையன்விளை.

வழிகாட்டி பலகை வேண்டும்

ராதாபுரம் தாலுகா ஆத்தங்கரை பள்ளிவாசல்- ராமன்குடி சாலையில் அமைந்துள்ள தத்துவநேரி விலக்கில் வழிகாட்டி பலகை இல்லை. இதனால் அந்த வழியாக புதிதாக வரும் பயணிகள், எந்த ஊர் என்பதை அறிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே குறிப்பிட்ட இடத்தில் வழிகாட்டி பலகை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

காங்கிரீட் தளம் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலைக்கார தெரு காளியம்மன் கோவில் மேற்புறம் உள்ள அடிபம்பை சுற்றி காங்கிரீட் தளம் இல்லை. இதனால் அருகே செல்லும் சாக்கடை தண்ணீர், அடிபம்பை சுற்றி இருப்பதாலும், அடிபம்பு தண்ணீர் வெளியே செல்ல வசதி இல்லாத காரணத்தாலும் அந்த பகுதி மக்கள் அறுவருப்புடன் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அடிபம்பை சுற்றி காங்கிரீட் தளம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்ைக எடுப்பார்களா?

பாலமுருகன், கோவில்பட்டி.

சிறுவர் பூங்கா தேவை

சேர்வைக்காரன்மடம் பஞ்சாயத்து செந்தியம்பலம் கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இங்குள்ள சிறுவர்- சிறுமிகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கிற்காக சிறுவர் பூங்கா அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்தராஜ், செந்தியம்பலம்.

குடிநீர் தட்டுப்பாடு

குலசேகரன்பட்டினம் மேலத் தெரு, கீழத்தெருவில் குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சாலமன், குலசேகரன்பட்டினம்.

உடைந்து கிடக்கும் போக்குவரத்து சிக்னல்

கோவில்பட்டி- எட்டயபுரம் சாலை வளைவில் உள்ள போக்குவரத்து சிக்னல் கம்பம் ஒன்று, எதிர்பாராதவிதமாக கனரக வாகனம் இடித்ததில் கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் சிக்னல் பகுதியில் தாறுமாறாக செல்கின்றன. எனவே சிக்னலை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

ஜான்ரவி, கோவில்பட்டி.

குண்டும் குழியுமான சாலை

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் இருந்து திரவியநகர் ஊருக்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துக்குமார், சிவநாடானூர்.

நிறுத்தப்பட்ட பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

சிவகிரியில் இருந்து தென்மலை, தெற்கு மற்றும் வடக்கு சுப்பிரமணியபுரம், அருகன்குளம், செந்தட்டியாபுரம் புதூர், ரெட்டியபட்டி, கரிவலம்வந்தநல்லூர் வழியாக சங்கரன்கோவில் வரை தினசரி 3 அரசு பஸ்கள் கொரோனா தொற்று காலத்துக்கு முன்பு இயங்கி வந்தது. அதன் பின்னர் இதுவரை இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே நிறுத்தப்பட்ட பஸ்களை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

ராஜேந்திரன், அருகன்குளம்.

வாறுகால் வசதி வேண்டும்

ஆலங்குளம் பேரூராட்சி 2-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவின் மேல்புறம் உள்ள சந்து பகுதியில் சாலை வசதியும், மழைநீர் செல்ல வாறுகால் வசதியும் இல்லை. இதனால் மக்கள் நடமாட முடியாத அளவிற்கு கழிவுநீர் குட்டை போல் தேங்கி கிடக்கிறது. எனவே வாறுகால் வசதி செய்து கொடுப்பதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ராஜ், ஆலங்குளம்.

ஆபத்தான மின்கம்பம்

ஆலங்குளம் தாலுகா கடையம் யூனியன் வெய்க்காலிப்பட்டி பஞ்சாயத்து மாதாபுரம் அம்மன் கோவில் 3-வது தெருவில் அமைந்துள்ள மின்கம்பத்தில் காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. எனவே அதனை மாற்றி அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், மாதாபுரம்.

வீட்டுக்குள் வரும் கழிவுநீர்

சங்கரன்கோவில் நகராட்சி 3-வது வார்டு முல்லை நகரில் வாறுகால் கட்டும் பணி முடிந்து 5 மாதங்கள் ஆன பிறகும் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. கழிவுநீர் தேங்கி வீட்டுக்குள் வருகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

நஸ்ருதீன், முல்லைநகர்.


Next Story