'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகார் பெட்டி செய்தி எதிரொலி

பாளையங்கோட்டை கே.டி.சி.நகரை சேர்ந்தவர் ஈனமுத்து. இவர் அங்குள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இருந்து சாலையின் இடது ஓரத்தில் மண் குவியலாக உள்ளதாக 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. அதன் எதிரொலியாக மண் குவியல் அகற்றப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சுகாதாரக்கேடு

கூடங்குளம் புறவழிச்சாலையில் சிறிய பாலத்தின் அருகே குப்பைத்தொட்டிகள் சாய்ந்து கிடப்பதால் குப்பைகள் கீழே கொட்டி குவிந்துள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை அகற்றி, குப்பைத்தொட்டிகளையும் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்.

தெருவிளக்கு எரியவில்லை

நெல்லை தச்சநல்லூரில் தேனீர்குளம் செல்லும் சாலையில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

ஆவுடையப்பன், நெல்லை டவுன்.

குப்பைகள் அள்ளப்படுமா?

நெல்லை மாநகராட்சி 10-வது வார்டு திருவண்ணநாதபுரம் மணப்படைவீடு மெயின் ரோடு பகுதியில் சந்தன மாரியம்மன் கோவில் தெரு அருகே மின்கம்பத்தை சுற்றி பொதுமக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள். அந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சரிவர அள்ளாததால், மர்மநபர்கள் அந்த குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுகிறது. எனவே, குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

உதயகுமார், திருவண்ணநாதபுரம்.

உடைந்து போன வாறுகால் பாலம்

அம்பை தாலுகா அடையகருங்குளம் ஊராட்சி கல்சுண்டு காலனி கிராமத்தில் வாறுகால் பாலம் உடைந்து கடந்த 3 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், இதுவரை சரிசெய்யப்படவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே, உடைந்த வாறுகால் பாலத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

முத்துக்குமார், கல்சுண்டுகாலனி.

மோசமான சர்வீஸ் ரோடு

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை- சுரண்டை மெயின் ரோட்டில் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் 5 இடங்களில் பாலம் வேலைகள் நடக்கிறது. அதற்கான சர்வீஸ் ரோடு குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, சர்வீஸ் ரோட்டை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

சக்தி, தென்காசி.

மரக்கிளை முறியும் அபாயம்

தென்காசியில் இருந்து குற்றாலம் செல்லும் சாலையில் ஓம் சக்தி கோவில் பஸ்நிறுத்தத்தின் அருகே உள்ள மரத்தில் கிளை முறிந்து விழும் அபாயம் உள்ளது. அதன் அருகே உயரழுத்த மின்கம்பிகளும் செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயக்குமார், மேலகரம்.

நோய் பரவும் அபாயம்

கடையநல்லூர் நகராட்சி 16-வது வார்டில் அமைந்துள்ள சிந்தா மதார் பள்ளிவாசல் அருகே தென் வடல் தெருவில் குப்பைகள் சரிவர அள்ளப்படவில்லை. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, குப்பைகளை அள்ளுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணிகண்டன், கடையநல்லூர்.

குண்டும் குழியுமான சாலை

திருச்செந்தூர் வடக்கு ரதவீதியில் இருந்து பிரியும், வெயிலு கந்தம்மன் கோவில் தெரு சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகி்ன்றனர். எனவே, சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மோகன சுந்தரம், திருச்செந்தூர்.

ஆபத்தான மின்கம்பம்

கோவில்பட்டி மாதாகோவில் ரோடு முச்சந்தி பகுதியில் அமைந்துள்ள மின்மாற்றி அருகே மின்கம்பம் ஒன்று காங்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. சூறைக்காற்றில் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இதனை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

பாலமுருகன், கோவில்பட்டி.


Next Story