'தினத்தந்தி' புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு

நெல்லை மாவட்டம் திசையன்விளை- நவ்வலடி ரோடு தலைவன்விளை விலக்கில் வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் இருப்பதாக ரவிச்சந்திரன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதையடுத்து அங்கு வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

சேதமடைந்த மோட்டார் அறை

மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 14-வது வார்டு எடுப்பல் கிராமத்தில் மோட்டார் அறையின் மீது சின்டெக்ஸ் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் மோட்டார் அறை சேதமடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்த நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மோட்டார் அறையை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

-தங்கசெல்வன், எடுப்பல்.

குடிநீர் தட்டுப்பாடு

சேரன்மாதேவி யூனியன் திருவிருத்தான்புள்ளி பஞ்சாயத்து புதுகிராமத்தில் குறைவான நேரமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, அங்கு சீராக குடிநீர் வழங்க அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.

-முத்துராமன், புதுகிராமம்.

பஸ் வசதி அவசியம்

நெல்லையில் இருந்து ரெட்டியார்பட்டி வழியாக திசையன்விளைக்கு இரவு 7.30 மணிக்கு பிறகு 9.30 மணிக்குதான் பஸ் வசதி உள்ளது. இரவு 8.30 மணிக்கு எஸ்.எப்.எஸ். பஸ் இயக்கப்படுவதால் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வதில்லை. எனவே, இடைப்பட்ட நேரத்தில் அனைத்து நிறுத்தங்களிலும் வழக்கம்போல் நின்று செல்லும் வகையில் பஸ் இயக்குவதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

-சுமிதா, பருத்திப்பாடு.

சேதமடைந்த வாறுகால்

வீரவநல்லூர் ரெயில்வே பீடர் ரோடு 10-வது வார்டு கம்பளத்தம்மன் கோவில் அருகில் வாறுகால் சேதமடைந்து திறந்த நிலையில் உள்ளது. எனவே, அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி வாறுகாலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகின்றன. எனவே, சேதமடைந்த வாறுகாலை சீரமைத்து கான்கிரீட் மூடி அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

-மாரிமணி, வீரவநல்லூர்.

தெருநாய்கள் தொல்லை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் ஆவுடையானூர் பஞ்சாயத்து சின்னநாடானூரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகளை தெருநாய்கள் விரட்டிச் சென்று கடிக்கின்றன. எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-அண்ணாமலை, சின்னநாடானூர்.

தெருவிளக்கு தேவை

* கடையம் யூனியன் பொட்டல்புதூர் பஞ்சாயத்து துர்க்கை அம்மன் கோவில் தெருவில் போதிய தெருவிளக்குகள் அமைக்கப்படாததால், இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, அங்கு போதிய தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டுகிறேன்.

-திருக்குமரன், கடையம்.

* மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி 1-வது வார்டு பெருமாள்நகர் வடக்கு பகுதியில் பெட்ரோல் பங்க் அருகில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால், அங்கு தெருவிளக்குகள் அமைக்காததால் இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், அங்கு விஷபூச்சிகளின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. எனவே, அங்கு தெருவிளக்குகள் அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

-கடம்பன்குளம், மணிகண்டன்.

புகார்பெட்டி செய்தி எதிரொலி;

சாலை நடுவில் இரும்பு தடுப்பு அகற்றம்

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அகிலாண்டபுரம் கரிசல்குளம் விலக்கு நாற்கரசாலையின் நடுவில் இரும்பு தடுப்பு அமைத்ததால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக முருகன் என்பவர் அனுப்பிய பதிவு 'தினத்தந்தி' புகார் பெட்டியில் பிரசுரமானது. இதன் எதிரொலியாக நாற்கர சாலையின் நடுவில் இருந்த இரும்பு தடுப்பு அகற்றப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

போக்குவரத்து நெருக்கடி

உடன்குடி சந்தையடி தெரு சந்திப்பு பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன. உடன்குடியில் இருந்து திருச்செந்தூர், செட்டியாபத்து, குலசேகரன்பட்டினத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. எனவே, சந்தையடி தெரு சந்திப்பு பகுதியில் ரவுண்டானா அல்லது சாலையின் நடுவில் தடுப்பு கம்பிகள் அமைப்பதுடன் போக்குவரத்து சிக்னல் அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.

-கலீல் ரகுமான், உடன்குடி.


Next Story