தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

திருச்சி

பாம்புகளால் நோயாளிகள் அச்சம்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தில் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் உள்ளது. இந்த வளாகத்தை சுற்றி ஏராளமான செடி, கொடிகள் வளர்ந்து காடுபோல காட்சியளிக்கிறது. இதனால் அங்கு பாம்புகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாம்புகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், உப்பிலியபுரம்.

கிணற்றை சுத்தம் செய்ய கோரிக்கை

உப்பிலியபுரம் ஒன்றியம், வைரிசெட்டிப்பாளையம் ஊராட்சி புளியஞ்சோலை செல்லும் வழியிலுள்ள மேற்கு குறும்பர் தெரு பகுதியில் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் உள்ள தண்ணீரை பொதுமக்கள் எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். தற்போது கிணற்றின் உள்ளே செடி, கொடிகள் வளர்ந்து குப்பை கூலமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிணற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வைரிசெட்டிப்பாளையம்.

போக்குவரத்திற்கு இடையூறு

லால்குடி ரவுண்டானா அருகில் பூவாளூர் சாலையில் பெரம்பலூர் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்கும் வேலை கடந்த 30 நாட்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் இன்று வரை பணி நிறைவடையவில்லை. இதனால் அரியலூர், சிதம்பரம், ஜெயங்கொண்டம், செல்லும் பஸ்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. மேலும் அந்த பகுதிகளில் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், லால்குடி.

கொசுக்கள் தொல்லை

திருச்சி பொன்னகர் செல்வநகர் முதல் தெருவில் (55 வது வார்டு) ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் தூங்க முடியவில்லை. மேலும் குழந்தைகளையும் கொசுக்கள் கடித்து வருதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கொசுமருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

ஓம்பிரகாஷ், செல்வநகர்.

மேம்பாலம் சரிசெய்யப்படுமா?

திருச்சி வாளாடி மேம்பாலத்தி்ன் வழியாக தினமும் ஏராளமான வானங்கள் சென்று வருகின்றனர். தற்போது மேம்பாலம் பாராமரிப்பு இல்லாமல் உள்ளதால் ஆங்காங்கே மண்கள் குவிந்து கிடக்கிறது. மேலும் மேம்பாலத்தின் இணைப்பு பகுதிகளில் ஆங்காங்கே சேதமடைந்து வருகிறது. மின்விளக்கும் சரியாக எரிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

பொதுமக்கள், வாளாடி.


Next Story