தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

பூங்கா அமைத்து கொடுக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், செந்துறையில் அரசுமருத்துவமனை அருகே ஏந்தல் ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றிள்ள கரையில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். இதனால் அந்த ஆக்கிரமைப்பை அகற்றி, ஏரியை சுற்றி நடைபாதை மற்றும் உடற்பயிற்சியுடன் கூடிய பூங்கா அமைத்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், செந்துறை.

லாரிகளால் அடிக்கடி விபத்து

அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி ,காட்டுபிரிங்கியம், அஸ்தினாபுரம், வாலாஜா நகரம் வழியாக டிப்பர் லாரிகள் தினமும் அதிக வேகமாக போட்டி, போட்டு கொண்டு செல்கிறது. இதனால் லாரிகளில் ஏற்றி செல்லும் சுண்ணாம்புக்கற்கள் சாலைகளில் சிதறி விழுகிறது. இதனால் பின்னால் மோட்டார் சைக்கிளில் வருவோர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இதனால் அடிக்கடி லாரிகளில் மேற்கண்ட பகுதிகளில் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதிவேகமாக செல்லும் லாரிகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்

நாய்கள் தொல்லை

அரியலூர் மாவட்டம், செந்துறை பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகிறது. இந்த நாய்கள் சாலைகளில் வாகனங்களில் செல்வோரை துரத்தி சென்று கடிக்க பாய்கிறது. இதனால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், செந்துறை.

குண்டும், குழியுமான சாலை

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியில் இருந்து குண்டவெளி ஆலத்திப்பள்ளம் சத்திரம் வழியாக கல்லாத்தூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் சாலையில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், நடந்து செல்பவர்கள் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் அவதிப்படுகின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்வகுமார், மீன்சுருட்டி

சேதமடைந்த மின்கம்பங்கள்

அரியலூர் தேடியில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியில் இருந்து அப்பகுதிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்மாற்றிகளை தாங்கி நிற்கும் 2 மின்கம்பங்களிலும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், அரியலூர்


Next Story