தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புதுக்கோட்டை

குண்டும், குழியுமான சாலை

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்திலிருந்து, பிராந்தனி கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு செல்வதற்கு பதிலாக 6 கிலோமீட்டர் சுற்றி செல்லவேண்டி உள்ளது. இதனால் பிராந்தனி கிராமத்தில் இருந்து பாண்டி பத்திரத்தில் உள்ள பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், பாண்டிபத்திரம்.

வாகன ஓட்டிகள் அவதி

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள வெட்டன்விடுதியில் புதுக்கோட்டை செல்லும் பிரதான சாலை மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் மழை பெய்தால் சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், நடந்து செல்பவர்கள் மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பெரும் அவதிப்படுகின்றனர். என இந்த சாலையால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே வெட்டன் விடுதி சாலைகளை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வெட்டன்விடுதி.

கூடுதல் பஸ் வசதி வேண்டும்

புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் தினமும் அதிகாலை 4.50, இரவு 9.05, 9.30 மணி ஆகிய 3 நேரங்களில் மட்டுமே புதுக்கோட்டை ரெயில் நிலையத்தில் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மறுமார்க்கமாக ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.45, இரவு 9.30, 10 மணி ஆகிய 3 நேரங்களில் பஸ்கள் இயக்கப்படுகிறது. எனவே சென்னை-ராமேசுவரம் செல்லும் ரெயில் ரெயில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு இரவு 12.05 மணிக்கு வருகிறது. இதனால் அந்த ரெயிலில் புதுக்கோட்டையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். அந்த நேரத்தில் பஸ் வசதி ரெயில் நிலையத்திற்கு இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரைமணி நேரத்தில் ஒரு தடவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையத்திற்கு கூடுதலாக பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்டீபன்ராஜ், புதுக்கோட்டை.

குரங்குகள் தொல்லை

புதுக்கோட்டை நகரப்பகுதியான கீழ ராஜவீதி, மேலராஜ வீதிகளில் ஏராளமான கடைகள் உள்ளன. இங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதற்கும், பல்வேறு தேவைக்காகவும் வந்து செல்கின்றனர். இந்தநிலையில் இங்குள்ள கடைகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டடகாசம் செய்து வருகிறது. சில நேரங்களில் கடைகளில் உள்ள திண்பண்டங்களை எடுத்து சென்று விடுகிறது. மேலும் சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் வாகன ஓட்டிகளும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் கொண்டு செல்லும் பைகளையும் பிடுங்கி சென்று வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், புதுக்கோட்டை.


Next Story