நாளை காலை உருவாகிறது "மாண்டஸ் புயல்"


நாளை காலை உருவாகிறது மாண்டஸ் புயல்
x

சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக உருவாகிறது எனவும், சென்னையில் இருந்து 700 கி.மீ தொலைவில் தென்கிழக்கு திசையில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தானே, வர்தா புயல்களை காட்டிலும் மாண்டஸ் புயலின் காற்று வேகம் குறைவாகவே இருக்கும் எனவும் நாளை முதல் கனமழையுடன் காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கத்தொடங்கி 10-ம் தேதி கரையை கடக்கும்போது பலத்த காற்று வீசக்கூடும் என வெதர்மேன் பிரதீப்ஜான் கூறியுள்ளார். மேலும் புயல் கரையை கடந்த பின் 12,13 தேதிகளில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Next Story